உலகம்
null

Israel Iran War | இஸ்ரேல் விமான நிலையத்தை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்

Published On 2026-03-06 15:52 IST   |   Update On 2026-03-06 16:05:00 IST
  • அயதுல்லா காமேனி கொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • பிரதமர் அலுவலகத்தை ஏற்கனவே தாக்கியிருந்த நிலையில், தற்போது விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளை துளைத்து வருகிறது. இதனால் இஸ்ரேலும் அதிக சேதத்தை சந்தித்து வருகிறது.

ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதும், கடுங்கோபத்தில் ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நெதன்யாகு உயிர் தப்பினார்.

இந்த நிலையில் பென் குரியன் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால் ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. இதனால் போர் வார கணக்கில் நீடிக்கும் எனத் தெரிகிறது.

Tags:    

Similar News