உலகம்

Masoud Pezeshkian | மத்தியஸ்தம் முயற்சி அமெரிக்கா, இஸ்ரேலை நோக்கியதாக இருக்க வேண்டும்: ஈரான் அதிபர்

Published On 2026-03-06 17:43 IST   |   Update On 2026-03-06 17:43:00 IST
  • எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் தயங்கமாட்டோம்.
  • பிராந்தியத்தில் அமைதி திரும்ப உறுதி பூண்டுள்ளோம்.

அமெரிக்கா- இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரில் ஈரானை வீழ்த்தாமல் விடமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சபதம் ஏற்றுள்ளார். அதேவேளையில் பதிலடி கொடுப்போம் என அஞ்சாமல் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒரு சில தினங்களுக்கு முன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. அது மிகவும் காலதாமதமானது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை குறித்த மத்தியஸ்தம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியன் கூறுகையில் "இது தெளிவாக இருக்கட்டும். பிராந்தியத்தில் அமைதிய நிலவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஆனால், எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதில் நாங்கள் தயங்கமாட்டோம். ஈரான் மக்களை குறைத்து மதிப்பிட்டு, இந்த மோதலை யார் தூண்டினார்களோ, அவர்களை நோக்கி மத்தியஸ்தம் இருக்கம் வேண்டும்" என்றார்.

இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.

Tags:    

Similar News