உலகம்

இஸ்ரேல் - ஈரான் மோதல்: இந்திய குடிமக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

Published On 2025-06-13 11:55 IST   |   Update On 2025-06-13 11:55:00 IST
  • தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
  • ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.  

இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News