செய்திகள்

பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி

Published On 2018-05-22 09:05 GMT   |   Update On 2018-05-22 09:05 GMT
பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொளுத்தும் வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களில் சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #heatwavekills #Pakistan
இஸ்லாமாபாத்:

பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட மேயர் வசீம் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். #heatwavekills #Pakistan
Tags:    

Similar News