உலகம்

டிரம்பிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் - ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

Published On 2026-01-13 10:58 IST   |   Update On 2026-01-13 10:58:00 IST
  • ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.

ஈரானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் வன்முறை ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே ஈரானில் போராடுபவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட முயன்றால், டிரம்பிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய காலிபப், "எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராகத் தவறான முடிவுகளை எடுப்பதையோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதையோ அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த டிரம்ப் நிர்வாகம் துணிந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பதிலடியைச் சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.

ஈரானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை அமெரிக்கா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரானிய மக்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை ஈரான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு சிறிய அச்சுறுத்தலுக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா அத்துமீறினால் ஈரான் அருகில் உள்ள நாடுகளில் நிலைகொண்டுள்ள உள்ள அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.  

Tags:    

Similar News