உலகம்
null

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - அவசரநிலை பிரகடனம் அமல்

Published On 2026-02-28 13:36 IST   |   Update On 2026-02-28 14:10:00 IST
  • இஸ்ரேலும் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் வான்வழி மூடப்பட்டுள்ளது.
  • ஈரானில் பொதுமக்கள் வெளியே வரவும் கூட்டங்கள் நடத்தவும் அரசு தடை விதித்தது.

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. நகரில் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டுவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலும் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் வான்வழி மூடப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதல் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

ஈரான் தலைநகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஈரானில் பொதுமக்கள் வெளியே வரவும் கூட்டங்கள் நடத்தவும் அரசு தடை விதித்தது.

Tags:    

Similar News