உலகம்
தாக்குதல் தொடங்கியது: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு
- 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
- ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதனால் ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. அவசர உதவிக்கு +989128109115, +989128109102, +989128109109, +989932179359 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.