இந்தியா
null

அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது - இலவசங்கள் குறித்து பியூஷ் கோயல் பளிச்

Published On 2026-01-13 10:42 IST   |   Update On 2026-01-13 10:44:00 IST
  • சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
  • மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும்.

தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குஜராத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அத்தகைய அரசியல் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

பிரதமர் மோடி ஒருபோதும் தேர்தலுக்காகவோ அல்லது வாக்குகளுக்காகவோ தற்காலிகமான இலவச வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

அதற்குப் பதிலாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

உதாரணமாக சூர்யாகர் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி பேனல்களை நிறுவுவதற்கு நுகர்வோர் சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

அத்தகைய திட்டங்களில் மக்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருக்க வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது, அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கக்கூடாது.

ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட, அரசாங்க ஆதரவுடன், குடிமக்களின் பங்களிப்பும் அவசியம். மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் " என்று தெரிவித்தார். 

 

Tags:    

Similar News