தமிழ்நாடு செய்திகள்

மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து வந்த த.வெ.க. தொண்டர் மாரடைப்பால் மரணம்

Published On 2025-08-21 16:17 IST   |   Update On 2025-08-21 16:18:00 IST
  • தவெக தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.
  • த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், த.வெ.க. மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சென்ற பிரபாகரன் என்பவருக்கு, சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மயங்கி விழுந்த பிரபாகரன் மேல் சிகிச்சைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Tags:    

Similar News