தமிழ்நாடு செய்திகள்
மதுரை மாநாட்டில், த.வெ.க. கொடியுடன் பனை மரத்தில் ஏறிய தொண்டரால் பரபரப்பு
- மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது.
- தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டு மேடைக்கு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.
மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
இதனிடையே, மதுரை மாநாட்டில், த.வெ.க. கொடியுடன் பனை மரத்தில் ஏறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.