தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மதுரை மாநாட்டில் விஜய் - அஜித் ஒன்றாக இருக்கும் கட்-அவுட்... புகைப்படங்கள் வைரல்

Published On 2025-08-21 15:38 IST   |   Update On 2025-08-21 15:38:00 IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது.
  • த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

மதுரை மாநாட்டில் விஜயும் அஜித்தும் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் பிடித்திருந்த கட்-அவுட் புகைப்படம் இணையத்தில் வைரலானாது.

Tags:    

Similar News