தமிழ்நாடு செய்திகள்

தவெகவுடன் சேர்ந்தால் காங்கிரஸிற்கு தமிழ்நாட்டில் மீண்டும் பவர் கிடைக்கும் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Published On 2026-01-28 12:55 IST   |   Update On 2026-01-28 12:55:00 IST
  • தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.

ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் தருவதாக சொல்கிறார். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று இயக்குநரும் விஜயின் தந்தையுமான S.A. சந்திரசேகர் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகன் பட பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது என்னை விட மக்களுக்கு நன்கு தெரியும். கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்.

தவெக தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.

அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News