தமிழ்நாடு செய்திகள்

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

Published On 2026-01-28 13:16 IST   |   Update On 2026-01-28 13:16:00 IST
  • இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை!
  • மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023)

2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (2024)

3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோவில் (2025)

4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில்...

இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!

திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்! என்று கூறியுள்ளார்.



Tags:    

Similar News