கெடுவான் கேடு நினைப்பான்- செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து டி.டி.வி. தினகரன் கடும் விமர்சனம்
- செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு.
- எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில்,
செங்கோட்டையனை அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கியது விபரீத முடிவு. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு அல்ல, அதை செய்தவருக்குத்தான் பின்னடைவு என்பதை காலம் உணர்த்தும்.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டு வருபவர் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போன்று செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்றார்.