பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளது- த.வெ.க நிர்வாகி அருண்ராஜ்
- பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு.
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.
த.வெ.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளதாக தவெகவின் நிர்வாகி அருண்ராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' படப் பிரச்னை மூலமாக பாஜக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை அனைவருக்கும் தெரியும். விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது.
பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு. பாஜக எங்கள் கொள்கை எதிரி என விஜய் அறிவித்தார்.
சிபிஐ, தணிக்கை துறை மூலமாக மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.
எத்தனையோ வகைகளில் அழுத்தம் கொடுத்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.
தவெகவுக்கு மக்கள் தரும் ஆதரவைப் பார்த்து பயந்து தான் கூட்டணியில் தேமுதிகவை திமுக சேர்த்துள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.