தமிழ்நாடு செய்திகள்
null

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்- மாவட்ட செயலாளர்களுக்கு த.வெ.க புதிய உத்தரவு

Published On 2026-02-20 11:18 IST   |   Update On 2026-02-20 11:23:00 IST
  • தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
  • வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவு.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.

ஒரு பக்கம் கூட்டணி தாவும் கட்சிகள், மறுபக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் இறங்கியுள்ளன.

இந்நிலையில், தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளது.

வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளை வழிநடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News