தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2026-02-20 11:23 IST   |   Update On 2026-02-20 11:23:00 IST
  • திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
  • ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்

2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.

* பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.

* திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.

* சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.

* மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.

* மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.

* அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.

* மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.

* தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.

* ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்

* தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.

* தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News