தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க. விருப்ப மனு இன்று முதல் விநியோகம்
- விருப்ப மனுவை மார்ச் 2-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தை ரூ.1000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
தி.மு.க. விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் நிலையில் மார்ச் 2-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படும்.
மேலும், விண்ணப்பப் படிவத்தை ரூ.1000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம்.