தமிழ்நாடு செய்திகள்
சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
- சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது
- புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு செல்ல புறப்பட்டவர்கள் செய்வதறியாமல் திண்டாடினர்.
சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மறுசீரமைப்பு பணி காரணமாக 5, 6-வது நடைமேடையில் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.