தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்- பி.டி. செல்வகுமார்

Published On 2025-12-11 11:49 IST   |   Update On 2025-12-11 11:49:00 IST
  • 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வகுமார் இருந்தார்.
  • கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்.

தவெக தலைவர் விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.

கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், பி.டி.செல்வக்குமார் மற்றும் அவரது தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் திமுகவின் இணைந்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.டி.செல்வகுமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக வந்துள்ளவர்களால் எங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விஜயின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தேன். விஜயின் ரசிகர் மன்றத்திற்கு தவெக-வில் முக்கியத்துவம் இல்லை.

அதனால், முதலமைச்சர் தலைமையிலான திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றும் வகையில் கட்சியில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News