தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி ஆட்சி: அமித்ஷா சொல்வதே வேதவாக்கு- எல்.முருகன் திட்டவட்டம்

Published On 2025-07-12 12:53 IST   |   Update On 2025-07-12 13:30:00 IST
  • அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
  • கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.

சென்னை:

மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.

தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.

எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள். கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.

சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.

அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.

இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Tags:    

Similar News