null
அதிமுகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா மாமியார்!
- தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்
- இவரது மகன் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. அவரை கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் லீமா ரோஸ்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரிசயில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
முன்னதாக கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த போது, அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதாகப் பரவிய செய்திகளை லீமா ரோஸ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.