தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., பணி நீக்கம் செய்ய வேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்

Published On 2025-09-28 18:09 IST   |   Update On 2025-09-28 18:09:00 IST
  • விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் நுழைந்தது எப்படி?
  • விஜய் பேசியபோது செருப்பு வீசப்படுகிறது என்றால் அதனை தவெகவினர் வீசுவதற்கு வாய்ப்பில்லை.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பரசார கூட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் மாவட்ட பஜாக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். கரூர் துயரத்திற்கு காரணமான அம்மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத குறுகலான பகுதியில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததே உயிர் பலிகளுக்கு காரணம்.விஜய் கூட்டத்தில் விசமத்தனமான நபர்கள் நுழைந்தார்களா? ஏன் மின்தடை ஏற்பட்டது என விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் நுழைந்தது எப்படி? அதில் இருந்தவர்கள் யார் ? என விசாரணை தேவை. விஜய் பேசியபோது செருப்பு வீசப்படுகிறது என்றால் அதனை தவெகவினர் வீசுவதற்கு வாய்ப்பில்லை, தீவிர விசாரணை தேவை.

திமுக தனது ஆட்சிக்காலத்தில் சரியாக செயல்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News