தமிழ்நாடு செய்திகள்

கண்டெய்னர் லாரியில் 745 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்- ரகசிய அறை வைத்து கடத்தியது அம்பலம்

Published On 2026-01-29 10:06 IST   |   Update On 2026-01-29 10:06:00 IST
  • கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர்.
  • ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநிலத்திலிருந்து இரும்பு பீரோ மற்றும் கட்டில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி வந்தது. பெருந்துறை போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர். ரகசிய அறையை திறந்து சோதனை செய்தபோது அதில் 745 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கென்னாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (30) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து கண்டெய்னரில் ரகசிய அறையில் இருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் விவாகரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News