தமிழ்நாடு செய்திகள்

தொடர் விலை உயர்வு - ஆர்டர்கள் வராததால் வெறிச்சோடிய வெள்ளி பட்டறைகள்

Published On 2026-01-29 11:14 IST   |   Update On 2026-01-29 11:14:00 IST
  • 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது.
  • இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.

சேலம்:

தமிழகத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொதுமக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருவதால் ஏழை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 4 லட்சமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் 25 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 425 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து 12 நாட்களில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டிற்காக தொழில் அதிபர்கள் வெள்ளியில் அதிக அளவில் தொடர்ந்து முதலீடு செய்வதால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த தொடர் விலை உயர்வால் சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் பட்டறைகளுக்கும் புதிய ஆர்டர்கள் வருவதில்லை. இதனால் வேலை இழந்த வெள்ளி பட்டறை தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வெள்ளி பட்டறைகள் களை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் ஏழை மக்கள் வெள்ளி கொலுசுகள் உள்பட வெள்ளி நகைகளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News