தமிழ்நாடு செய்திகள்
#TNAssemblyElection அதிமுகவை பின்னுக்கு தள்ளி இந்த தேர்தலில் விஜய் 2-வது இடத்திற்கு வருவார்- ஜோதிமணி ஆரூடம்
- கூட்டணி கட்சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.
- தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும்.
கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறாது என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இந்த தேர்தலில் 3-வது இடத்திற்கு செல்லும், நிதிஷ்குமாரை பதவி விலக செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் கூட்டணி கட் சியை பா.ஜ.க. கபளீகரம் செய்து பதவிக்கு வருகிறது.
அதேபோல் தமிழகத்திலும் அ.தி.மு.க. என்ற கட்சிக்கு கடைசி தேர்தலாக இது இருக்கும். இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருக்கக்கூடிய விஜய் நிச்சயமாக 2-வது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றார்.