தமிழ்நாடு செய்திகள்
null

நான் முதல்வன் திட்டத்தால் #UPSC தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2026-03-07 07:01 IST   |   Update On 2026-03-07 08:08:00 IST
  • அகில இந்திய அளவில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம்பிடித்தார்
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர்.

2025-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே. இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்.

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.டிஸ்லைன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் முதல்வன் திட்டம் 2.O பற்றி நான் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.

நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த version எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள்...

நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, International அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News