தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டில் 3 மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்..!
- சென்னையில் 98.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
- திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட் வெயில்.
தமிழகத்தில் குளிர் காலம் சென்று கோடைக்காலம் தொடங்கியுள்ளது. காலையில் சற்று பனியின் தாக்கம் இருந்தாலும் நேரம் செல்ல செல்ல வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் இன்று 3 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெளியில் பதிவாகியுள்ளது. கரூர் பராமத்தி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தலா 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட், சென்னை மற்றும் தர்மபுரியில் 98.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்திலேயே 100 டிகிரி வெயில் கொளுத்தும் நிலையில், ஏப்ரல் மே மாதங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.