தமிழ்நாடு செய்திகள்

#TVKVijay த.வெ.க. மகளிர் தின விழா - பெண்களுக்கான திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார் விஜய்

Published On 2026-03-07 08:49 IST   |   Update On 2026-03-07 08:49:00 IST
  • நட்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 முதல் 5 மணி வரை த.வெ.க. சார்பில் மகளிர் தினவிழா நடைபெற உள்ளது.
  • நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று நடைபெறும் சிறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 முதல் 5 மணி வரை த.வெ.க. சார்பில் மகளிர் தினவிழா நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிருக்கான பிரத்யேகத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவிக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. மற்றவர்கள் நேரலையில் காணலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை த.வெ.க. சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News