GOLD PRICE TODAY: வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
- கடந்த 2-ந்தேதி முதல் விலை குறைந்து கொண்டே வந்தது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 2-ந்தேதி முதல் விலை குறைந்து கொண்டே வந்தது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்து இருந்தது. நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 120-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம். சவரனுக்கு ரூ.1.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
6-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
5-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
4-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,23,720
2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
6-03-2026- ஒரு கிராம் ரூ.290
5-03-2026- ஒரு கிராம் ரூ.295
4-03-2026- ஒரு கிராம் ரூ.295
3-03-2026- ஒரு கிராம் ரூ.315
2-03-2026- ஒரு கிராம் ரூ.315