தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதால் அ.தி.மு.க. வாக்குகள் விஜய்க்கு போகாது- ஜெயக்குமார்

Published On 2025-09-15 14:11 IST   |   Update On 2025-09-15 14:11:00 IST
  • ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது.
  • உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.

சென்னை:

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கும் விசயம்தான்.

அண்ணா படத்தையோ எம்.ஜி.ஆர். படத்தையோ பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் அவருக்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.

விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றார்... சி.எம். சார் என்றார்... என்னை கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன். சி.எம். ஸ்டாலின் சார் என்று சொல்லாமல்.. சி.எம். சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.

அமைச்சர் நேரு மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து தான் நடக்கிறது.

எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால் எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News