தமிழ்நாடு செய்திகள்

திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-11-24 16:58 IST   |   Update On 2025-11-24 17:05:00 IST
  • அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
  • நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

டிஜிபி நியமனம்

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபி குறித்து முடிவு செய்யாதது ஏன்?

நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறுவது ஏன்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே டிஜிபி தேர்வு பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.

பட்டியலில் உள்ள 3 பேரும் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதால்தான் திமுக அரசு தடுமாறுகிறது.

இன்னும் டிஜிபி நியமனம் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபி நியமனம் முறையாக நடைபெற்றது.

விவசாயிகள் பாதிப்பு

திமுக அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகளுக்கு துயரம் ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்கு பின்னர் நெல்லை உடனே கொள்முதல் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.

கொள்முதல் செய்வதிலும் தாமதம் கொள்முதல் செய்த நெல்லை அனுப்புவதிலும் தாமதம். நெல்லை கொள்முதல் செய்யாததால்தான் மழையில் நனைந்து முளைத்து விட்டன.

நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அளவுக்கு லாரிகள் இல்லை. மதுரை சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது.

நானும் டெல்டாகாரான் என வீரவசனம் பேசிய முதல்வர், விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார். இப்போதும் நான் விவசாயிதான். முக ஸ்டாலின் விவசாயிகளுக்கு விரோதி.

முதலமைச்சர் விவசாயிகளை பார்க்க செல்லாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார்.

நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை தெரிவிக்க வேண்டும்.

மத்திய வேளாண் சட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வருக்கு தெரியுமா?.

3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.

ஆளுங்கட்சி செய்வதை நாங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விவசாயிகள் பாதிக்கப்படும் போது திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

காவிரி நதிநீர் பிரச்சனையில் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. 

Tags:    

Similar News