தமிழ்நாடு செய்திகள்

நீட் விலக்கு தந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என இபிஎஸ் அறிவிக்க தயாரா? - மு.க.ஸ்டாலின் சவால்

Published On 2025-04-06 12:40 IST   |   Update On 2025-04-06 12:40:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்.
  • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே சென்று, அதனை பார்வையிட்டார்.

இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்"பாஜக கூட்டணிக்கு செல்லும் முன், நீட் தேர்வு விலக்கு தந்தால்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?

ராகுல்காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News