தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய்

Published On 2025-12-18 14:16 IST   |   Update On 2025-12-18 14:48:00 IST
  • ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
  • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Tags:    

Similar News