உள்ளூர் செய்திகள்

ஓங்காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2026-03-05 12:10 IST   |   Update On 2026-03-05 12:10:00 IST
  • பவானி அருகே காளிங்கராயன்பாளையம், வாய்க்கால்பாளையத்தில் மிகவும் பிரசிதிபெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது.
  • இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.

சித்தோடு:

பவானி அருகே காளிங்கராயன்பாளையம், வாய்க்கால்பாளையத்தில் மிகவும் பிரசிதிபெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டு கடந்த 17-ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதலும், பின்னர் இரவு குண்டத்திற்கு தீ மூட்டுதலும், நேற்று காலை, ஆற்றில் இருந்து அம்மன் அழைத்தலும், பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆண், பெண்கள், என சுமார் ஐம்பதிற்கு மேற்பட்டோர் நீண்ட வரிசையில் வந்து நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், கும்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை, சுவாமி மொரமணையுடன் பண்டிகை நிறைவடைகிறது.

Tags:    

Similar News