தமிழ்நாடு செய்திகள்

#Sengottaiyan ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் - செங்கோட்டையன்

Published On 2026-03-05 10:42 IST   |   Update On 2026-03-05 11:39:00 IST
  • கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • காங்கிரஸ் என்றைக்குமே தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் உள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் இன்று த.வெ.க. தேர்தல் பிரசாரம் வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

த.வெ.க நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.க. சார்பாக இன்று முதல்கட்டமாக ஈரோடு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

குறிப்பாக கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரசாரம் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக விசில் சின்னத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு கிராம மக்கள் இடையே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் விசில் சின்னத்தை விஜய் அறிமுகம் செய்தார்.

இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நமது வாக்கு ஜனநாயகத்தை காக்குகின்ற வாக்கு. அதை வீணடிக்காமல் தி.மு.க.வை வீழ்த்த வாக்கு அளியுங்கள்.

தேர்தல் களத்தில் தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். 3000 கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதுவும் ஏமாற்று வேலை தான்.

தொடர்ந்து காங்கிரஸ் என்றைக்குமே தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் உள்ளது.

எங்களிடத்தில்(த.வெ.க) வந்துவிடுவோம் என கூறி தி.மு.க.விடம் கூடுதல் சீட்டை காங்கிரஸ் பெற்றுள்ளது.

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம். அவருக்கு இந்த முறை அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காது.

கூட்டணிக்கு வருகின்றவர்களை வரவேற்போம் முதலில் அவர் (ஜெயக்குமார்) வருகிறேன் என கூறட்டும். அதன் பிறகு சேர்ப்பது குறித்து பார்க்கலாம். புகழேந்தி என்னுடைய நண்பர் அல்ல அவருக்கு பல நண்பர், என்றார்.

Tags:    

Similar News