என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் ஆதவ் மற்றும் அருண் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் - ஜெயக்குமார் விமர்சனம்
- விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்க தயாராக வேண்டும்
- விஜய் அழைத்தும் தவெக பக்கம் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் மக்களிடையே உரையாற்றினார்.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்க தயாராக வேண்டும். எழுதி வைத்ததை வாசிக்கக் கூடாது. ஆட்சியில் பங்கு என்று விஜய் அழைத்தும் தவெக பக்கம் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை
ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து படிப்பது ஈஸி. அதை யார் வேண்டுமானாலும் பேசலாம்; அதுவும் விஜய் கைதேர்ந்த நடிகர் என்பதை சொல்ல வேண்டியதில்லை அரசியலில் ஆதவ் மற்றும் அருண் இயக்கத்தில் ஸ்கிரிப்ட் படி விஜய் நடிக்கிறார்" என்று தெரிவித்தார்.
Next Story






