தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ்- இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் #RajyasabhaElection

Published On 2026-03-05 11:16 IST   |   Update On 2026-03-05 11:17:00 IST
  • தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
  • அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 போட்டியிடுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.

அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், தேமுதிக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து எல்.கே.சுதீஷ் ஆசி பெற்றார்.

திமுக கூட்டணியில் 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டதன் மூலம் முதல்முறையாக தேமுதிக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News