தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த இ.பி.எஸ்.

Published On 2025-07-16 18:58 IST   |   Update On 2025-07-17 08:11:00 IST
  • சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
  • அப்போது, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இ.பி.எஸ். அழைப்பு விடுத்தார்.

கடலூர்:

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

மாநாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சீட்களைக் குறைத்து விடுவார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எதற்காக அசிங்கப்படுகிறீர்கள்?

தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News