தமிழ்நாடு செய்திகள்

முகமது ஜோசப் விஜய் - தவெக தொண்டர்கள் பிடித்திருந்த பதாகை இணையத்தில் வைரல்

Published On 2026-02-23 13:02 IST   |   Update On 2026-02-23 13:02:00 IST
  • வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
  • தவெக நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.

வேலூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக தலையில் குல்லா மற்றும் கையில் வேலுடன் இருக்கும் விஜய் படம் ஒன்றை தொண்டர் ஒருவர் கையில் வைத்திருந்தது இணையத்தில் வைரலானது. அதே போல் விஜய், ஜோசப், முகமது என்று 3மத அடையாளங்களுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் வைத்திருந்ததும் இணையத்தில் வைரலானது.

Tags:    

Similar News