தமிழ்நாடு செய்திகள்

மனசாட்சியே இல்லையா? முதல்முறையாக கரூர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

Published On 2026-02-23 13:13 IST   |   Update On 2026-02-23 13:13:00 IST
  • கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
  • தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அந்த நண்பர் முதல்வர் அவர்கள் தான். சமீபத்தில் நிருபர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது, அவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் என்று முதல்வர் பதிலளித்தார். உண்மையில் நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், ஏன் கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா?

நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், நிகழ்வுகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கின்றீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் பொய்களை அடித்துவிடுகின்றீர்கள். உங்களது உண்மையான நண்பர்கள் யாரென்று சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் - இதெல்லாம் தான் உங்களது உண்மையான நண்பர்கள்.

தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நமக்கு அது அவசியமும் இல்லை. ஆனால், உங்களது ஆட்சி தான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டிற்கே தேவையில்லாத ஆட்சி," என்றார். 

Tags:    

Similar News