தமிழ்நாடு செய்திகள்

ஒவ்வொரு வீட்டிற்கும் வருவேன்..!- த.வெ.க தலைவர் விஜய் வாக்குறுதி

Published On 2026-02-23 13:36 IST   |   Update On 2026-02-23 13:36:00 IST
  • தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
  • எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்

தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்

தங்களுக் பாதுகாப்பு இல்லை என பெண்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.

சட்டம்-ஒழுங்கு குறித்து நான் பேசுவதால் முதல்வருக்கு சங்கடம். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.

எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News