தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்- சிபிஐ புதிய மாநிலச் செயலாளர்
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிபிஐ-ன் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டை மத அடிப்படைவாதம் சுற்றியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்" என்றார்.