தமிழர்களை காக்க, தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை #DMK தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடே சிறுகனூரில் திரண்டுள்ளது. சிறுகனூர் பெருகனூராக மாறிவிட்டது.
- திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தந்த வரவேற்பு, மகிழ்ச்சியால் வயது குறைந்துவிட்டது.
திருச்சி அடுத்த சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. அங்கு திரும்பும் திசையெல்லாம் கருப், சிவப்பு என திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுகவின் பெரும்சேனை இங்கு திரண்டுள்ளது. இந்த சேனையின் தலைமை தொண்டன் நான். தமிழ்நாடே சிறுகனூரில் திரண்டுள்ளது. சிறுகனூர் பெருகனூராக மாறிவிட்டது.
கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவது எல்லாமே மாநாடுகள் தான். மாநாட்டிற்கு நான் வந்தபோது திமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தந்த வரவேற்பு, மகிழ்ச்சியால் வயது குறைந்துவிட்டது.
தாய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்க காரணம் உடன்பிறப்புகள் தான். திமுகவிற்கு திருப்புமுனை கொடுத்த திருச்சியில் இந்த மாநாட்டை நடத்தி வருகிறோம்.
கடைசி பாலில் சிக்சர் அடித்து ஜெயிக்கும் Grand Finishing போல திருச்சியில் இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறோம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றயைப் பெறவே இந்த மாநாடு.
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டு் முழக்கம் தனிநபருக்காக முழக்கம் அல்ல திமுகவுக்கான முழக்கம். திமுக நடத்திய 12 மாநில மாநாடுளில் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடைபெற்றுள்ளது.
200 ஏக்கரில் மாநாடு.. 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என திமுகவின் இலக்கு. திருச்சி என்றாலே திருப்பம், முழக்கம், மகத்தான எழுச்சி, வெற்றி.
1953-ல் கைக் குழந்தையாக இருந்த என்னை இதே திருச்சியில் தான் கலைஞரிடம் காண்பித்தனர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து திமுக தான் ஆள வேண்டும் என்ற உறுதமொழியை இந்த மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு நம்மை நம்பி உள்ளது. நாமும் தமிழ்நாட்டை நம்பி உள்ளோம். தமிழர்களை காக்க, தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.