தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி திருந்தமாட்டாரு.., புகழேந்தி விமர்சனம் | EPS

Published On 2026-03-09 17:07 IST   |   Update On 2026-03-09 17:07:00 IST
  • என்.டி.ஏ.-வுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தகராறு கிடையாது.
  • பழனிசாமி என்.டி.ஏ.-வில் சேர்ந்ததால் ஒப்புக்கொள்ள முடியாது.

அதிமுக-வில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார்.

பின்னர் டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவ்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. இங்கே வலுவாக இல்லை. கன்னியாகுமரியில் ஒரு இடத்தில் கூட அதிமுக-வுக்கு டெபாசிட் வராது. முன்னதாக ஒரு தொகுதியில். தற்போது எத்தனை தொகுதி இருக்கிறதோ, அத்தனை தொகுதியில் போகும்.

எடப்பாடி பழனிசாமி திருந்தாத வரை.., திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என தலைவர் பாடிய பாடியது மாதிரி, வருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்ற மாதிரி எடப்பாடி பழனிசாமி திருந்தமாட்டாரு. கட்சியை ஒரு வழி பன்னிட்டாரு. கட்சியை பாஜக-வுக்கு அடமானம் வைத்து பின்னாடி சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்.டி.ஏ.-வுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தகராறு கிடையாது. பழனிசாமி என்.டி.ஏ.-வில் சேர்ந்ததால் ஒப்புக்கொள்ள முடியாது. என்.டி.ஏ.-வை முழுமையாக காலி செய்வதுதான் என்னுடைய இலக்கு. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் துரோகி என்கிறார். அந்த துரோகியை விட்டு வைத்துள்ளீர்களே சார். கொடநாடு வழக்கை விசாரிக்கவில்லையே சார். எடப்பாடி பழனிசாமியை சுகபோகமாக வாழ முதல்வர் விட்டு வைத்திருக்கிறார். அதுதான் எனக்கு வருத்தம்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News