தமிழ்நாடு செய்திகள்

Congress | கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்

Published On 2026-03-09 18:23 IST   |   Update On 2026-03-09 18:23:00 IST
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 28 தொகுதிகளிலும் வெற்றி பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் அதிகப்படியான தொகுதிகளை கேட்டது. ஆனால், திமுக 28 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக இருப்பதாக செய்திகள் வெளியானது. உடனடியாக காங்கிரஸ் மேலிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த ப. சிதம்பரத்தை அனுப்பி வைத்தது. அவர் மு.க. ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியது உள்ளிட்டவைகளை விவரமாக மேலிடத்திற்கு கூறினார்.

பின்னர் 28 சட்டமன்ற தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்பின் இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில் "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். 28 தொகுதிகளில் வெற்றி பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 25 இடங்கள் வழங்கப்பட்டன. அதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News