தமிழ்நாடு செய்திகள்

திருச்சி மாநாட்டில் "ரேம்ப் வாக்" சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2026-03-09 19:02 IST   |   Update On 2026-03-09 19:02:00 IST
  • தலைவர்கள் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
  • 110 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றினார்.

திருச்சி அடுத்த சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. திருச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றினார்.

மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் சென்றபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்தார்.

மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல், வாள் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News