தமிழ்நாடு செய்திகள்

அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-15 13:05 IST   |   Update On 2025-10-15 13:05:00 IST
  • எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
  • தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.

சென்னை:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கம் அளித்து பேசினர்.

இதனிடையே, சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* கூட்டணிக்காக தான் அ.தி.மு.க. இப்படி செய்கின்றனர்.

* என்ன கூட்டணி அமைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

* அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

* எப்படியாவது கலவரம் செய்ய வேண்டும், வெளிநடப்பு செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வந்துள்ளனர்.

* தங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட இப்படி ஒரு போர்க்குரல் அ.தி.மு.க.வினரிடம் இருந்து வருமா எனத் தெரியவில்லை.

* அ.தி.மு.க. எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் பயன் தராது என்றார். 

Tags:    

Similar News