கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது போலீசாரின் கையை கடித்த தவெக தொண்டர்!
- அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்'
- தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம்
தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய 'மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர்.
அப்போது பலரும் கேட் ஏறிகுதித்து மனமகிழ் மன்றம் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு தவெகவினரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல அரசியல் கட்சி தலைவர்களும் கூறிவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.