தமிழ்நாடு செய்திகள்

திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது- அண்ணாமலை கண்டனம்

Published On 2025-02-19 20:40 IST   |   Update On 2025-02-19 20:40:00 IST
  • பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்து போராட்டம்.
  • பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது.

புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் ஏழு பேருக்கு, பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், தமிழக பாஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜகதீசன் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான பாஜக சகோதர சகோதரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News